நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.
தனுஷ் நடிப்பில் தனுஷ்43 படத்தை நரேன் கார்த்திகேயன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தனுஷ் மற்றும் கார்த்திக் நரேனுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு கார்த்திக் நரேன் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியேறி விட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இதை மறுக்கும் விதமாக சத்யஜோதி பிலிம்ஸ் ஷுட்டிங் ஸ்பாட்டில் தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோர் விவாதிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.