ரஜினிக்கு கதை சொல்கிறாரா தேசிங்க் பெரியசாமி!

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2021 (15:34 IST)
ரஜினி தனக்கும் ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கூறியதை அடுத்து இயக்குனர் தேசிங் பெரியசாமி ஒரு கதையை ரஜினிக்காக தயார் செய்துள்ளாராம்.

துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் பாராட்டியுள்ள தகவல் தெரியவந்துள்ளது

இதுகுறித்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: "சூப்பர்.. எக்ஸலண்ட்.. ஹா.. ஹா.. ஹா.. வாழ்த்துக்கள்.. பெரிய ஃபியூச்சர் இருக்கு உங்களுக்கு. எனக்கும் ஏதாவது கதை இருந்தா ரெடி பண்ணுங்க’ என தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதையடுத்து இப்போது இயக்குனர் தேசிங் பெரியசாமி ஒரு கதையை தயார் செய்துள்ளாராம். அதை விரைவில் ரஜினிக்கும் சொல்ல உள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்