1 பில்லியன் டாலர் வசூல்.. சாதனை படைத்த டெட்பூல் அண்ட் வுல்வரின்!

Prasanth Karthick
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (11:02 IST)

மார்வெல் சூப்பர்ஹீரோ திரைப்படமான டெட்பூல் அண்ட் வுல்வரின் (Deadpool and Wolverine) வெளியாகி இரண்டே வாரங்களில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

 

 

ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் மார்வெல் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். முன்னதாக பாக்ஸ்  ஸ்டார் வசம் இருந்த டெட்பூல் மற்றும் எக்ஸ் மென் உள்ளிட்ட மியூட்டண்ட் கேரக்டர்கள் டிஸ்னியால் வாங்கப்பட்ட பின் ஒரு ரிபூட் திரைப்படத்தை உருவாக்கத் தொடங்கினார்கள்.

 

அப்படியாக வெளியானதுதான் இந்த டெட்பூல் அண்ட் வுல்வரின். இதில் லோகனாக ஹ்யூ ஜாக்மேனே நடித்திருந்ததால் படம் வெளியாகும் முன்னே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்த இந்த படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளது.
 

ALSO READ: விதவிதமாய்.. வித்தியாசமாய்! ஏகப்பட்ட பட அறிவிப்புகளை அள்ளிவிட்ட டிஸ்னி! - D23 2024 Updates!
 

முதல் வார இறுதியிலேயே உலக அளவில் இந்திய மதிப்பில் ரூ.3650 கோடிகள் வசூலித்து 2024ம் ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் படமாக சாதனை படைத்தது. தற்போது திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் 1 பில்லியன் டாலர்கள் (8 ஆயிரம் கோடி ரூபாய்) வசூலித்து பெரும் ஹிட் அடித்துள்ளது.

 

இது மார்வெலின் முந்தைய ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்திற்கு பிறகு மார்வெலின் மிகப்பெரிய வசூல் சாதனை படமாகும்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்