''தசரா ''திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (22:41 IST)
நானி நடிப்பில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி வெளியான படம் ‘தசரா. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக  வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இந்த படம் நல்ல வசூலை செய்து வருகிறது. முதல் நாளில் மட்டும் உலகம் முழுக்க சுமார் 38 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்த நிலையில், 6 நாளில் 100 கோடி ரூபாய் வசூலில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், தசரா படம் இந்தியாவில் மட்டுமின்றி, வெளி நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் குவித்து வருகிறது.

தற்போதுவரை இப்படம்  வெளி நாட்டு பாக்ஸ் ஆபீஸில் 2 மில்லியனையும், இந்தியாவில் ரூ.110 கோடி வசூலீட்டியுள்ளதாக இன்று படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது,.
இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனனர்.

சமீபத்தில், இப்படத்தின் சக்ஸஸ் நிகழ்வில் படத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுக்கு விலையுயர்ந்த பி எம் டபுள் யூ காரை தயாரிப்பாளர் பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்