புஷ்பா திரைப்படத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (20:29 IST)
புஷ்பா என்ற தெலுங்கு திரைப்படத்திற்கு  தாதா  சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சுகுமார் இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜூன் – ரக்ஷனா மந்தனா நடிப்பில் உருவான படம் புஷ்பா. இப்படம்  கடந்தாண்டு தமிழ், தெலுங்கு, இந்தி , கன்னடம்,  மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸாகி ரூ.360 கோடிக்கு மேல் வசூலீட்டியுள்ளது.

இந்நிலையில், புஷ்பா திரைப்படத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு மத்திய அரசின் தாதா சாஹிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்