இஞ்சி இடுப்பழகி... குடும்பத்துடன் குத்தாட்டம் போட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!

Webdunia
சனி, 9 மே 2020 (13:10 IST)
இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் குடும்பத்துடன் ஆடிய கியூட் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்.

டிக்டாக்கில் எப்போதும் சினிமா பாடல்களை மரு உருவாக்கம் செய்வதில் பயணர்கள் ஆர்வம் காட்டுவர். அந்தவகையில் ஹிட் அடித்த பாடல்கள் டிக்டாக்கில் ஒரு ரவுண்டு வந்துவிடும். இந்நிலையில் தற்போது பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தற்போது மனைவி குழந்தைகளுடன் டிக் டாக்கில் கமலின் தேவர்மகன் படத்தின் இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இது சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வைரலாகி வருகிறது.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் - பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான 'அல வைக்குந்தாபுராமுலு' படத்தில் இடம்பெற்ற "புட்ட பொம்மா"  பாடலுக்கு டேவிட் வார்னர் குடும்பத்துடன் டிக் செய்து ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்