நடிகை சுனைனாவுக்கு கொரோனா

Webdunia
திங்கள், 10 மே 2021 (16:53 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இந்நிலையில், மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகை சுனைனாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காதலில் விழுந்தேன், வம்சம், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுனைனா. 10 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் கோலோட்சி வருகிறார்.

இந்நிலையில் இன்று இவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: நான் எவ்வளவு  எச்சரிக்கையாக இருந்தாலும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். எனது குடும்பத்தினரைத் தவிர யாரும் என்னுடன் தொடர்பில் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்