கொரோனா நிவாரணத்தொகை..மளிகைப் பொருள்கள் ...முக்கிய அறிவிப்பு

புதன், 23 ஜூன் 2021 (16:30 IST)
கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினை வரும் 25 ஆம் தேதிக்குள் மக்களுக்கு விநியோகிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பர்வி வரும் நிலையில், தற்போது ஓரளவு குறைந்துவருகிறது.

இந்நிலையில், கோவை, திருப்பூர், உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள மாவட்டங்களி சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில்,  கொரோனா நிவாரண தொகை ரூ.2000  மற்றும் 14 வகை இலவச மளிகைப் பொருட்கள் தொகுப்பினை வரும் 25 ஆம் தேதிக்குள் மக்களுக்கு விநியோகிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட உணவுப் பொருள் வழன்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்