சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வை ( TET அறிவித்தது. ஆனால் 2011 ஆம் ஆண்டு முதல் இத்தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்ற இடைநிலைக் கல்வி, முதுநிலைக் கல்வி,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 7 ஆண்டு காலம் வரைதான் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் செல்லுபடியாகும். அதன்பிற்கு மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டுமெனக் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்குப் பதிலாக ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் எனக் கூறியுள்ளது.