மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார் !

வெள்ளி, 18 ஜூன் 2021 (17:18 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு அதிகரித்த நிலையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் முன்னெடுப்புகளால் சமீப காலமாக குறைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்   தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வாயிலாகவே மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கப்பட்டது. தற்போதும் அப்படி தொடர்கிறது.

கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 10 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டாலும்கூட கொரோனா இரண்டாம் அலை பரவியதால் பள்ளிகள் மூடப்பட்டன. சமீபத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாவர்கள் அனைவரும் தேர்ச்சி அனைவரும் பொதுத்தேர்வு இன்றித் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலைவில் இந்தாண்டு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று படிப்பார்களா எனக் கேள்வி எழுந்ததுள்ளது. அதேசமயம் விரைவில் மூன்றாம் கொரொனா அலைத்தொற்று பரவும் எனக் கூறப்படுகிறது. அதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

எனவே முதல்வர் ஸ்டாலின் இந்த  ஆண்டிற்கான பாடங்களைக் கல்வி தொலைக்காட்சியின் மூலம் தொடங்கிவைக்கிறார். மேலும் மேட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து புதிய கல்வி ஆண்டிற்கான பாடங்களை நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். அத்துடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கும் நிகழ்வும் தொடங்கிவைக்கவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்