தினமும் குடித்துவிட்டு தான் படப்பிடிப்பு வருவார்: ஜெய் மீது பலூன் தயாரிப்பாளர் புகார்

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (23:34 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 'பலூன்' பட இயக்குனர் சினிஷ், நடிகர் ஜெய்யை மறைமுகமாக தாக்கி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன்னர் பலூன் தயாரிப்பாளர்,  ஜெய் குறித்து புகார் ஒன்றை தயாரிப்பாளர் சங்கத்திடம் அளித்துள்ளார்

இந்த புகாரில் 'பலூன் திரைப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே திரைக்கு வரவேண்டிய நிலையில் ஜெய் கொடுத்த டார்ச்சர் காரணமாக தாமதமாக ரிலீஸ் ஆனதாக தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின்போது தினமும் ஜெய் குடித்துவிட்டு தான் வருவார் என்றும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே எப்போது பேக்கப் என்றுதான் கேட்பார் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு ஜெய் வருவதில்லை என்றும் வந்தாலும் 4 மணி நேரம் அவரை வைத்து படப்பிடிப்பு நடத்துவதற்குள் எங்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிடும் என்றும் தெரிவித்துள்ளதோடு, ஜெய் கொடுத்த டார்ச்சர் காரணமாக இயக்குனர் சினிஷ் தற்கொலை முயற்சி வரைக்கும் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜெய்யால் தங்கள் நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் நஷ்டம் என்றும், அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்