படத்தின் பாடல் , டயலாக், காஸ்டியூம், காமெடி, காதல் கலாட்டா என அத்தனையும் தூக்கலாக போட்டு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்காக ஜெயம் ரவிக்கு சிறந்த நடிகருக்கான விருது கூட வழங்கப்பட்டது. இந்த படத்தில் சண்டை காட்சி ஒன்று பஜ்ஜி கடைக்குள் நடக்கும். அந்த சண்டைக்கு பிறகு தான் ஜெயம் ரவி விபத்தில் அடிபட்டு நினைவிழந்து கோமா நிலைக்கு சென்றிடுவார்.
அந்த காட்சியில், பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்திருப்பவர் நடிகை கவிதாராதேஷ்யம். பாலிவுட் நடிகையான இவர் ஹிந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளாராக கலந்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர் தான் அந்த பஜ்ஜி கடை ஆன்டியா என்ற ஆளாளுக்கு வாய்பிளக்கும் வகையில் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது.