அதை தொடர்ந்து தற்போது அணு ஆயுதம் குறித்த வரலாற்று படம் ஒன்றை இயக்கியுள்ளார் நோலன். 1945ல் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மேல் அமெரிக்கா வீசிய அணுகுண்டு லட்சக்கணக்கான உயிர்களை அடையாளம் தெரியாமல் அழித்தது.
அப்படியான நாசகார அணுகுண்டு குறித்து தொடங்கப்பட்டதுதான் மன்ஹாட்டன் ப்ராஜெக்ட். அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் இயற்பியல் விஞ்ஞானி ராபர்ட் ஓபன்ஹெய்மர் மற்றும் குழுவினர் முதல் அணுகுண்டை வெடிக்க செய்தனர். அந்த ஓபன்ஹெய்மர் அணு ஆயுத சோதனை குறித்த அரசியல் பார்வையுடன் கூடிய படமாக இதை கிறிஸ்டோபர் நோலன் உருவாக்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் இப்போது படம் உலகம் முழுவதும் ஜூலை 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.