4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் அர்னால்டு… ஆக்‌ஷன் பட பிரியர்களுக்கு குட் நியூஸ்!

புதன், 26 ஏப்ரல் 2023 (07:46 IST)
ஹாலிவுட்டின் பிரபல ஹீரோவான அர்னால்ட் டெர்மினேட்டர், ப்ரிடேட்டர், எக்ஸ்பெண்டபில்ஸ் உள்ளிட்ட பல ஆக்‌ஷன் படங்கள் மூலமாக உலகம் முழுவதும் புகழ் பெற்றவர். தற்போது தன்னுடைய 73 வயதிலும் படங்களில் நடித்து வரும் அர்னால்ட் கடந்த சில ஆண்டுகள் முன்னதாக இதயத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதற்கு பிறகு ஆக்‌ஷன் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அவர், ஜனரஞ்சக படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடைசியாக அவர் டெர்மினேட்டர் டார்க் பேட் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ரிலீஸாகி 4 ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.  இந்நிலையில் இப்போது அவர் ப்ரேக் அவுட் என்ற ஆக்‌ஷன் படத்திலும், ஃபுபார் என்ற வெப் சீரிஸிலும் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கி, அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்