கிறிஸ்துமஸ் விடுமுறையைக் குறிவைக்கும் ரஜினி படம்

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (12:55 IST)
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தயாராகிவரும் ‘குப்பத்து ராஜா’, கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீஸ் ஆகலாம் எனத் தெரிகிறது.
 
 
டான்ஸ் மாஸ்டரான பாபா பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘குப்பத்து ராஜா’. இது, ஏற்கெனவே ரஜினி நடிப்பில் வெளியான படத்தின் பெயர். தயாரிப்பாளரிடம் முறையாக அனுமதி வாங்கி, அதே தலைப்பில் இந்தப் படத்தை எடுத்து  வருகின்றனர்.
 
ஜி.வி.பிரகாஷ் குப்பத்து இளைஞனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரா.பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் சேர்ந்து பூனம் பாஜ்வா, எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை, கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்