இதனால் உத்வேகமடந்த பெண்கள் சிலர் தாங்கள் அனுபவித்த பாலியல் அத்துமீறலகளை அவருக்கு தெரியப்படுத்தி வந்தனர். அவற்றையும் அவர் தனது டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இதையடுத்து பெண் பத்திரிக்கையாளர், கவிஞர், பாடலாசிரியர் என பல முகம் கொண்ட சந்தியா மேனன் என்பவர் தனது கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய செய்தியை தனது டிவிட்டரில் சின்மயி பகிர்ந்திருந்தார்.
இதனால் தமிழ் சினிமாவில் பெரும் சலசல்ப்பு உண்டானது. இது குறித்து இரண்டு நாட்களாக எந்த பதிலும் கூறாமல் மௌனம் காத்து வந்த வைரமுத்து இன்று தனது டிவிட்டரில் தன் மீதான பாலியல் புகார் குறித்து மறுப்பு தெரிவித்திருந்தார். அதில் “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்’ என கூறியிருந்தார்.
இந்த டிவிட்டை வைரமுத்து பகிர்ந்த சில நிமிடங்களிலேயே அந்த டிவிட்டை மறுபகிர்வு செய்து அதில் பொய்யர் என குறிப்பிட்டுள்ளார் பாடகி சின்மயி. இதனால் இந்த பாலியல் விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.