ஜெய்பீம் விவகாரம்: நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:19 IST)
ஜெய்பீம் பட விவகாரம் குறித்து நடிகர் சூர்யா மீது பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்பட்டதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் ஆனால் அதே நேரத்தில் இந்த படம் சில சர்ச்சைகளையும் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜெய்பீம் பட விவகாரம் குறித்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது
 
ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இழிவு படுத்தியதாக நடிகர் சூர்யா மற்றும்  இயக்குனர் ஞானவேல் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கை ரத்து செய்வதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்