‘ஏ’ சான்றிதழ் கூட தரமறுத்த சென்சார் அதிகாரிகள்

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (13:06 IST)
சென்சாருக்கு விண்ணப்பித்து இருந்த ஒரு படத்தைப் பார்த்த அதிகாரிகள், ‘ஏ’ சான்றிதழ் கூட தரமறுத்து விட்டார்கள்.
 



துருவா, அஞ்சனா நடிப்பில் ராகேஷ் இயக்கியுள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இந்தப் படத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சில சமூகவிரோதக் காட்சிகளை, அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார்களாம். எனவே, இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், சான்றிதழே தரமுடியாது என மறுத்திருக்கிறார்கள்.

’யு/ஏ’ அல்லது ‘ஏ’ சான்றிதழாவது கொடுங்கள் என இயக்குநர் ராஜேஷ் கெஞ்சியும் அவர்கள் மனம் இறங்கவில்லையாம். ரிவைஸிங் கமிட்டிக்குப் போகச் சொல்லிவிட்டார்களாம் சென்சார் அதிகாரிகள்.
அடுத்த கட்டுரையில்