''லியோ'' பட 'இசை வெளியீட்டு விழா' அப்டேட் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (13:42 IST)
சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இன்று மக்கள் இயக்க மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வி.ம.இ., பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

‘’இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்துள்ள எல்லோரும் தயவு செய்து சாப்பிட்டுத்தான் செல்ல வேண்டும். வந்திருக்கும் எல்லோருக்கும்  மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இங்கிருப்போர் தளபதியை பார்க்க வந்திருப்பதாக கூறினர். ஆனால்,  தளபதி ஊரில் இல்லை என்று சொல்லித்தான் மாவட்ட நிர்வாகிகள்  இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு உங்களை அழைத்து வந்தனர் அதன்படி, தளபதியின் சொல்லுங்கிணங்க என்பது அவரது முகம். மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து மகளிரணி தலைவிகள் செயல்பட வேண்டும்.. இம்மாதம் லியோ ஆடியோ விழா நடைபெறவுள்ளது. இதில், யாரெல்லாம் வர விருப்பம் கொண்டுள்ளீர்களோ அவர்கள் தங்களின் பெயரை மாவட்ட  நிர்வாகிகளிடம் தெரிவிக்கலாம். அடுத்த மாதம் வெளியாகவுள்ளா ‘லியோ’ படத்தை மிகப்பெரிய வெற்றியடைய செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்