சந்தானம் திரைப்படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு: தணிக்கை அதிகாரியை மிரட்டிய மர்ம நபர்

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (13:06 IST)
நடிகர் சந்தானம் நடித்துள்ள ஏ 1 திரைப்படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சமூகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தணிக்கை அதிகாரிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நடிகர் சந்தானம் நடித்துள்ள ஏ 1 திரைப்படத்தில் பிராமண சமூகத்திற்கு அவதூறு ஏற்படுத்துவது போல் சில காட்சிகளும், வசனங்களும் இருப்பதாக தமிழ்நாடு பிராமணர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பலரிடமிருந்தும் ஏ1 திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

இந்நிலையில் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் செயல்படும் மத்திய திரைப்பட தணிக்கை வாரிய அலுவலகத்தில் அதிகாரியாகப் பணிபுரியும் ஒருவரின் தொலைப்பேசிக்கு கடந்த புதன்கிழமை ஒரு மர்ம நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், ஏ1 திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கியது குறித்து, அந்த தணிக்கை அதிகாரியை மிகவும் தரைக்குறைவாக பேசியும், மிரட்டியும் உள்ளார். இது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த அதிகாரி புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்