ஹெச் வினோத் பேசமாட்டார்… அவர் படங்கள் பேசும் – போனி கபூர் பாராட்டு!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (10:40 IST)
தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் இயக்குனர் ஹெச் வினோத்தைப் பாராட்டி பேசியுள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கோ அதற்கு முன்போ இந்த படம் ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச் வினோத்தே இயக்கவும், போனி கபூர் தயாரிக்கவும் உள்ளார். இந்த படத்தின் அனைத்து முன் தயாரிப்பு வேலைகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தயாரிபபாளர் போனி கபூர் ‘இயக்குனர் ஹெச் வினோத் திறமையானவர். அவர் குறைவாக பேசுவார். ஆனால் அவரின் படங்கள் பேசும். அஜித் அவரை என்னிடம் கதை சொல்ல மும்பைக்கு அனுப்பினார். என் மனைவியிடம் தமிழில் கதை சொல்லி அசத்திவிட்டார். என்னுடைய அடுத்த படமும் ஹெச் வினோத் உடன்தான்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்