பெங்களூரை தெற்கு தொகுதி பாஜக எம் பி தேஜாஸ்ரீ சூர்யா சென்னை சேர்ந்த பாரதி பாடகி மற்றும் பரதநாட்டிய கலைஞர் சிவஸ்ரீ ஸ்தந்த பிரசாத் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் இவர்களுடைய நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பரும் பெங்களூரு தெற்கு தொகுதி எம்பி ஆன தேஜஸ்ரீ சூர்யாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.
சென்னை சேர்ந்த பாடகி மற்றும் பரதநாட்டிய கலைஞர் சிவஸ்ரீ ஸ்தந்த பிரசாத் என்பவரை அவர் திருமணம் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நான்காம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
கர்நாடக இசை பாடகி மற்றும் பரதநாட்டிய கலைஞராக சிவஸ்ரீ ஸ்தந்த பிரசாத் இன்ஜினியரிங் படித்துள்ளார் என்பதும் சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்.ஏ பட்டம் மற்றும் சமஸ்கிருத கல்லூரியில் சமஸ்கிருதத்தில் எம் ஏ பட்டம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் படத்தின் கன்னட பதிப்பில் இவர் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதும் இவ்வாறு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.