பிக்பாஸ் ரியோ-ரம்யா பாண்டியன் இணையும் ‘தோட்டா’: பர்ஸ்ட்லுக் ரிலீஸ்

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (20:32 IST)
பிக்பாஸ் ரியோ-ரம்யா பாண்டியன் இணையும் ‘தோட்டா’: பர்ஸ்ட்லுக் ரிலீஸ்
பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களான ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் இணைந்த ஆல்பம் ஒன்று விரைவில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த ஆல்பத்திற்கு ‘தோட்டா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள் நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல யூடியூப் சேனல் Noise and Grains தயாரிப்பில் வெளியாகவிருக்கும் இந்த ஆல்பத்தில் ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் அசத்தலாக நடனம் ஆடியுள்ளனர் 
 
இந்த ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள நிலையில் இந்த ஆல்பம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரம்யா பாண்டியன் மற்றும் ரியோ ராஜ் ஆகியோர் பெயர் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்