ஊரடங்கு முடியட்டும் உன்னை ஜெயிலில் அடைகிறேன் - ஹேக்கரை மிரட்டிய பிக்பாஸ் அபிராமி!

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (14:53 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களும் ஒருவரான அபிராமி அஜித் நேரக்கொண்ட பார்வை படத்தில் நடித்து இன்னும் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்பத்தில் கவினுடன் காதல், பின்னர் அவர் நிராகரித்ததும் முகனுடன் காதல் என மக்களிடையே வெறுப்பை சம்பாதித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் குறைந்த நாட்களிலேயே முன்னணி கதாநாயகி ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார். சில படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் இவரது பெயரில் போலியான டிக்டாக்  பக்கம் ஒன்று இயங்கி வந்தது. இதனால் அவரது பெயருக்கு மிகுந்த அவதூறு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து தனது official டிக்டாக் கணக்கையே அபிராமி டெலீட் செய்துள்ளார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த ஹேக்கர் யார் என்பதை கண்டுபிடித்து புகைப்படத்துடன் வெளியிட்டு திட்டியுள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்து அவனை ஜெயிலில் தள்ளுவேன் என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்