வாயாடி நீயா நானா? வந்து பாருடி - தாமரையுடன் மோதிய பிரியங்கா!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (12:46 IST)
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள தாமரை ஆரம்பத்தில் கொஞ்சம் அப்பாவி போன்றும் வெகுளித்தனமாக இருப்பது போன்றும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால், போக போக அவரின் உண்மை முகம் வெட்டவெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது. 
 
ஸ்ருதியுடன் நாணயம் திருட்டு சண்டையில் மோதிக்கொண்டபோது காச் பூச்சுனு கத்தி கூப்பாடு போட்டார். அதையடுத்து கிராமம் நகரம் என பிரித்து விவாத மேடை நடந்து வருகிறது. இதில் ஒருத்தரை ஒருத்தர் குறித்து மட்டம் தட்டி பேசி வருகின்றனர் போட்டியாளர். 
 
அந்த வகையில் பிரியங்கா நகராணியில் இருப்பவர்கள் சூப்பரா இந்த சீசனில் விளையாடுறாங்க. எங்ககிட்ட 4 நாணயங்கள் இருக்கு. அங்க இருக்க 5 பெரும் ஸ்வாஹா என கூறி பயங்கரமாக கலாய்த்து கடுப்பேத்த தாமரை கொந்தளித்துவிட்டார். வா வா வந்துத்தான் பாரு... யாரு பெரிய வாயாடின்னு அடிச்சு காட்டுவோம் என இறங்கிவிட்டார் பிரியங்கா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்