ஹார்ட் பேஷண்ட் இந்த ப்ரோமோவை பார்க்காதீங்க - ஆரி என்ன பண்ண...? கத்தி கதறிய சம்யுக்தா!

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (15:52 IST)
பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியான ப்ரோமேக்கள் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும் படி இல்லை.  டாஸ்க்கை இரண்டு நாளாக இழுத்தடித்துவிட்டனர். இதனால் போர் அடித்துப்போன ஆடியன்ஸிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் சம்யுக்தாவை வைத்து சம்பவம் செய்துள்ளார் பிக்பாஸ்.

ஆம், அகம் டிவி வழியே இன்று பிறந்தநாள் கொண்டாடும் சம்யுக்தாவின் மகன் தோன்ற கத்தி கதறி கூப்பாடு போட்டுவிட்டார் சம்யுக்தா. அவங்க அழுகையை ஹார்ட் பேஷண்ட் யாரேனும் பார்த்தால் நெஞ்சை பிடிச்சுக்கிட்டு உக்கார்ந்திடுவாங்க போல. இதுக்கு அனிதா அழுகை எவ்வளவோ மேல்.

அவ்வளவு சின்ன குழந்தைய விட்டுட்டு வாரது. வந்து இங்க சீன் போடுறது. உலக மகா நடிப்புடா சாமி. முதலில் இந்த ப்ரோமோவை பார்த்ததும் ஆரிக்கும் சம்யுக்தாவிற்கும் இஅடையில் சண்டை வெடித்து கதறி அழுகிறார் என பலரும் பதறிவிட்டனர். பின்னர் சப்புன்னு ஆகிடுச்சு... இன்னைக்கு ப்ரோமோ எல்லாமே இவ்வளவு கேவலமா இருந்ததுன்னா ப்ரோக்ராம் எந்த லட்சணத்துல இருக்குமோ ஷாப்ப்பா...

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்