நேற்று சனம் ஷெட்டி - சுரேஷ் விவகாரத்தில் சனம் மரியாதையை குறைவாக அவன் இவன் என பேசியதை பாலாஜி கண்டித்தார். ஆனால், அவரே அப்படி தான் நடந்துக்கொண்டார். பாலாஜி சுரேஷை பார்த்து, யோவ் உங்கக்கென்ன மூளை குழம்பி போச்சா..? வயசு ஆக ஆக இப்படி தான் பண்ணிக்கிட்டு இருக்குற என்று அவமரியாதையாக பேசியதை இன்று இந்த பட்டிமன்றத்தில் ஆரி சுட்டிக்காட்டினார். இருந்தும் இந்த ப்ரோமோ மொக்கையா தான் இருக்கு. அன்பான குடும்பமா அல்லது போட்டிகளமானு தெரியல. ஆனால், இன்னைக்கு எபிசோடு படு மொக்கையா இருக்க போகுதுன்னு மட்டும் தெரியுது.