சூர்யா-42 படத்திற்கு பிரமாண்ட பட்ஜெட்... 2 பாகங்களில் உருவாகிறது! ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (18:18 IST)
சூர்யா -42 படம் 2 பாகங்களாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 42 படத்தின் பூஜை  நேற்று சென்னையில் தொடங்கியது.

இந்த பூஜையில் சூர்யா, சிறுத்தை சிவா,  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்படம் குறித்து பேசிய பேட்டி,தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் அடுத்த வாரம் வெளியாகிறது என்றும் தெரிவித்தார் .

மேலும் இது ஒரு பான் இந்தியா திரைப்படம் வேண்டும் தமிழ் தெலுங்கு கன்னடம் ஒரியா மராத்தி இந்தி உள்பட மொத்தம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் படங்களில் இது அதிக பட்ஜெட் படம் எனவும் இப்படத்தின் ஷூட்டிங் முதலில் கோவாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட  நிலையில், தற்போது முட்டுக்காட்டில் கோவாவை மேட்ச் பண்ணுவதுபபோல் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியகிறது.

இப்படத்தில் ஆக்சன் நாயகி திஷா பட்டாணி நடித்து வருவதாகவும், இப்படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால், இப்படத்தை 2 பாகங்களாக எடுக்கத் தயாரிப்பாளர் முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்