பிக் பாஸ் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டு கதறி அழுத சக்தி!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (11:43 IST)
பிக் பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்கின்படி ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்க  சொல்லி, பாரம்பரியமிக்க வைரம் என்று கூறி ஒரு கல்லை பத்திரமாக பிக் பாஸ் வீட்டில் பாதுகாக்க சொல்கிறார் பிக் பாஸ்.அந்த வைரத்தை திருடும் வேலையை நடிகர் சக்தியிடம் ஒப்படைகிறார் பிக் பாஸ்.

 
இதனை தொடர்ந்து நடிகர் சக்தி யாருக்கும் தெரியாமல் திருடிவிட்டு அந்த இடத்தில் போலி கல்லை வைத்துவிடுகிறார்.  ஓவியா போலி வைர கல்லை திருட, பிறகு கையும், களவுமாக பிடிபடுகிறார். உண்மை வைர கல்லை சக்திதான் பத்திரமாக வேறு இடத்தில் மறைத்து வைத்துள்ளார் என்ற சந்தேகம் வையாபுரிக்கு அதாவது குடும்ப தலைவருக்கு இருந்தது. இந்நிலையில் வைரம் திருடுபோனது பற்றி போட்டியாளர்கள் மத்தியில் பல வாக்குவாதங்கள் நடந்தது. இறுதியாக சக்தி தான் திருடியதை ஒப்புக்கொண்டார். சுயநலமாக இருக்காமல், மற்றவர்களை மதித்து ஒப்புக்கொண்ட அவர் "நான் இங்கு திருடுவதற்காக வரவில்லை" என கதறி அழுதார்.
 
என் தாத்தாவுக்கு மூணு பசங்க, அதில் அப்பாதான் இரண்டாவது பையன். அதேபோல் எனக்கு இரண்டாவது மகன் ரோல் கொடுத்திருக்கிறார்கள். என்னை திருட வைத்து, எமோஷனலாக செய்துவிட்டார்கள் என அழுதார். "இங்கு நான் ஏதாவது தப்பு  செய்தால், என் அப்பா தப்பு செய்தது மாதிரி" என மேலும் அவர் கூறி கண் கலங்கினார்.
அடுத்த கட்டுரையில்