இந்த படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக கண்டனங்கள் எழுந்தன.
சமீபத்தில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு “இந்த படம் இஸ்லாமியர்கள் பயப்படும் படியாக இல்லாமல், கொண்டாடும் விதமாக இருக்கும்” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பர்ஹானா திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், திருவாரூரில் இப்பட காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளன.