''சூர்யா 42'' பட புதிய அப்டேட்..தயாரிப்பாளர் டுவீட்...ரசிகர்கள் குஷி

வியாழன், 6 ஏப்ரல் 2023 (17:43 IST)
சூர்யா42 பட புதிய அப்டே இன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில்,  சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய படம் சூர்யா 42. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பபில் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துகு ‘வீர்’ என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாகவும்,. இந்த படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

சூர்யா படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட படமாக இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த  நிலையில், சூர்யா 42 படத்தின் புதிய அப்டேட்  இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

An announcement you were waiting for

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்