இயக்குனர் பாலா மற்றும் பாரதிராஜா ஆகிய இருவருக்கும் குற்றப் பரம்பரை என்ற படத்தை இயக்குவது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரச்சனை உருவானது.
பாரதிராஜா தன்னுடைய கதாசிரியர்களில் ஒருவரான ரத்னகுமார் எழுதிய குற்றப்பரம்பரை எனும் கதையை இருபது வருடங்களுக்கு மேலாக எடுக்க வேண்டும் என முயற்சி செய்தும் அது பலிக்கவில்லை. ஆனால் அதை தன்னுடைய கனவு படைப்பு எனக் கூறிவந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலை படமாக எடுக்க இயக்குனர் பாலா ஆயத்தமானார். இதையறிந்த பாரதிராஜா ஏற்கனவே தான் எடுப்பதாக அறிவித்தது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இதனால் பாலாவைத் திட்டி பேட்டிக் கொடுக்க, பாலாவும் பதிலுக்கு ப்ரஸ்மீட் வைத்து பாரதிராஜாவை வறுத்தெடுத்தார். இதனால் கோலிவுட்டே அப்போது பரபரப்பானது. ஆனால் இரு தரப்புமே அந்த படத்தை இன்னும் தொடங்க கூட இல்ல்லை. இந்நிலையில் இப்போது பாரதிராஜாவுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கவேண்டும் என தமிழ் சினிமாவில் தேசிய விருது வாங்கிய கலைஞர்கள் ஒரு கையெழுத்து இயக்கத்தை உருவாக்கியுள்ளனர்.
அதில் பாலாவும் கையெழுத்திட்டுள்ளார். இதனால் இரு தரப்பும் நடந்த பிரச்சனைகளை மறந்து சமாதானமாகி விட்டதாக சொல்லப்படுகிறது.