பாகுபலி-2 சமூக வலைதளங்களில் லீக் அதிர்ச்சியில் படக்குழு?

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (11:11 IST)
ராஜமெளலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில்  பாகுபலி 2 வரும் ஏப்ரல் 28 தேதி வெளியாக உள்ளது. இதனை ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெலயாக உள்ளது.

 
இந்நிலையில் பாகுபலி படக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளீயாகியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுவரை நெத சமூக வலைதளங்களிலும் படக்காட்சிகளை காண முடியவில்லை. ஹிந்தியில் இன்று ப்ரீமியர் காட்சி இருக்கும் என தெரிகின்றது. இந்நிலையில் படத்தின் ஒரு சில காட்சிகளை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் யாரோ அப்லோட் செய்ய, தற்போது இது வைரலாகியுள்ளது. இது படக்குழுவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்