”அவதார் படத்துக்கு பேர் வச்சதே நான் தான்”… பிரபல இந்திய நடிகர் பெருமிதம்

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (13:48 IST)
ஹாலிவுட்டில் வெளியான அவதார் திரைப்படத்திற்கு பெயர் வைத்ததே நான் தான் என பெருமிதம் பொங்க கூறியுள்ளார் பிரபல ஹிந்தி நடிகர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமான அவதார், உலகமெங்கும்  பெரும் வெற்றி பெற்றது. உலகளவில் 2.78 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்புப்படி, ரூ.19,282 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் அந்த திரைப்படத்திற்கு அவதார் என்கிற தலைப்பை நான் தான் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூனுக்கு தேர்வு செய்து கொடுத்தேன் என பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறியுள்ளார்.

சமீபத்திய ஒரு பேட்டியில், இது குறித்து நடிகர் கோவிந்தா,
”ஜேம்ஸ் கேம்ரூனுக்கு, அவதார் என்கிற தலைப்பை நான் தான் கொடுத்தேன். இந்த படம் பெரும் வெற்றி பெரும், ஆனால் இந்த படத்தை எடுத்து முடிக்க 7 ஆண்டுகள் ஆகும் என அவரிடம் கூறினேன். இதனால் அவர் மிகவும் கோபமடைந்தார். மேலும் நான் முடியாத ஒரு விஷயத்தை கற்பனை செய்கிறீர்கள் எனவும் கூறினேன்” என தெரிவித்தார்.


மேலும் அவதார் என பெயர் வைத்துவிட்டு, வேற்றுகிரகவாசியை காண்பித்துள்ளார். ஆனாலும் தான் சொன்னது போல் அந்த படம்  பெரும் வெற்றியை பெற்றது எனவும் கூறியுள்ளார்.

அவதார் திரைப்படத்தில் நடிக்க தன்னை ஜேம்ஸ் கேம்ரூன் அழைத்ததாகவும், உடம்பு முழுக்க பெயிண்ட் பூசிக்கொண்டு நடிக்க தன்னால் முடியாது என மறுத்ததாகவும் அந்த பேட்டியில் நடிகர் கோவிந்தா தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 2021 ஆம் ஆண்டு வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்