டைட்டில் உடன் வெளியான அட்லி – ஷாருக் பட டீசர்…. ரிலீஸ் எப்போது?

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (14:27 IST)
அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி.

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஜவான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்