ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட உதவி இயக்குனர்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (08:30 IST)
மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள ஆல்ப்புழா பகுதியில் பிறந்த ராகுல் மலையாள சினிமாக்களில் பல ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது முன்னணி நடிகர் பிருத்விராஜ் நடிக்கும் ஒரு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை அவர்து மர்ம மரணத்துக்கான காரணம் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்