கரடுமுடனான உடம்புடன் ஆர்யா… ரஞ்சித் படத்தின் புதிய ஸ்டில்!

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:37 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான காலா திரைப்படத்துக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் ’’சார்பேட்டா பரம்பரை’’ என்ற திரைப்படம் உருவாக உள்ளது.  இதில் ஆர்யா பாக்ஸராக நடிக்க உள்ளார். இப்படத்திற்காக அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் சென்னையை அடுத்த ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வரும் நிலையில், நேற்று பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஆர்யாவின் 30 வது படமான ’’சார்பேட்டா பரம்பரை என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று ஆர்யா பாக்ஸிங் வீரராக தோற்றமளிக்கும் புகைப்படத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்