யானை ஆடியோ லான்ச் ’அப்படி’ இருக்கணும்… அருண் விஜய்யின் ஆசை!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (17:49 IST)
அருண் விஜய் நடித்து வரும் யானை படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிய உள்ளது.

பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ’யானை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் அருண்விஜய்யின் அட்டகாசமான போஸ்டர்கள் இணையதளங்களில் ஸ்தம்பித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில் இப்போது மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில் பின் தயாரிப்பு வேலைகள் முடிந்து இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழாவை மிகச் சிறப்பாக பிரம்மாண்டமாக நடத்தவேண்டும் என அருண் விஜய் ஆசைப்படுகிறாராம். இந்த படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் நடிகர்களின் பட்டியலில் இணைந்துகொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்