பார்டர் படத்தின் பெயரில் ஆரம்பித்த பஞ்சாயத்து!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (15:30 IST)
அருண் விஜய் நடித்து ரிலிஸுக்கு தயாராகியுள்ள பார்டர் படத்தின் பெயரில் ஏற்கனவே ஒரு படம் உருவாகியுள்ளதாம்.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கி வரும் திரைப்படம் “பார்டர்”. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். குற்றம் 23 படத்தை தொடர்ந்து அருண் விஜய் – அறிவழகன் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகும் படம் இந்த “பார்டர்”. இதில் அருண் விஜய் ராணுவ வீரராக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் பொது முடக்கம் முடிந்ததும் இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பார்டர் என்ற பெயரில் ஏற்கனவே நடிகர் தினா நடிப்பில் ஒரு படம் உருவாகி சென்சார் வரை சென்றுள்ளதாம். அது தெரியாமல் அருண் விஜய் படத்துக்கும் பார்டர் என பெயர் வைத்து வியாபாரம் எல்லாம் தொடங்கியுள்ளனர். இதனால் பெயர் தொடர்பான பஞ்சாயத்து வரும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்