அருண்பாண்டியனின் ‘அன்பிற்கினியாள்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (12:17 IST)
அருண்பாண்டியனின் ‘அன்பிற்கினியாள்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மலையாளத்தில் வெளிவந்த ’ஹெலன்’ என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் அருண்பாண்டியன் மற்றும் அவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் நடித்து வருகின்றனர் என்பதும் ‘அன்பிற்கினியாள்’ என்று டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது 
 
விஜய் சேதுபதி நடித்த ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய கோகுல் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அருண்பாண்டியனே தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ‘அன்பிற்கினியாள்’ படத்தின் டிரைலர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலரை பிரபல நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளத்தில் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்