சென்டிமென்ட் + ஆக்‌ஷன்: அஜித், அர்ஜுன் காம்போ?

Webdunia
திங்கள், 12 மார்ச் 2018 (20:50 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நான்காவது முறையாக இணைந்துள்ள படம் விஸ்வாசம். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.
 
இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமைய்யா ஆகியோரும் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர். மேலும், இந்த படத்தில் நடிப்பதற்கு அர்ஜுனிடம் கேட்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே, அஜித் மற்றும் அர்ஜுன் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் அர்ஜுன் அஜித்துக்கு வில்லனாக நடிக்கக்கூடும் என தெரிகிறது. 
 
அர்ஜுன் இன்னும் எதுவும் சொல்லாத நிலையில், ஏற்கனவே, இருவரும் ஒன்றாக நடித்ததால் இந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்வார் என படக்குழுவினர் எதிர்ப்பார்த்து உள்ளனர். 
 
மேலும், இந்த படம் வீரம் படம் போன்று குடும்ப சென்டிமென்ட் நிறைந்த ஆக்‌ஷன் படமாக இது இருக்கும் என பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்