கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் மீண்டும் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்தது.
இந்த படத்தில் மணிகண்டன், கண்ணா ரவி மற்றும் ஸ்ரீகௌரி பிரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ஆவரேஜான வெற்றியைப் பெற்றது. இதையடுத்து நம்பிக்கைக்குரிய தயாரிப்பு நிறுவனமாக உருவாகி வருகிறது இந்த படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோ நிறுவனம்.