பாலிவுட்டிலும் மாஸ்டர் போல ஒரு படம் வேண்டும்… இயக்குனர் ஆசை!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (11:04 IST)
பாலிவுட் இயக்குனர் அனுராக் பாஸு தமிழில் மாஸ்டர் திரைப்படம் போல பாலிவுட்டிலும் ஒரு படம் வெளியானால்தான் ரசிகர்கள் திரையரங்கத்துக்கு வருவார்கள் என்று கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு 8 மாதங்கள் கழித்து திறக்கப்பட்டன. ஆனால் மக்கள் கொரோனா அச்சம் மற்றும் பொருளாதார நிலை காரணமாக பழையபடி திரையரங்குகளுக்கு வருவதில்லை. இந்நிலையில் தமிழில் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் மூலம் மீண்டும் ரசிகர்கள் திரையரங்குக்கு வர ஆரம்பித்தனர்.

இந்நிலையில் பாலிவுட்டிலும் மாஸ்டர் போல ஒரு படம் வந்தால்தான் ரசிகர்கள் மீண்டும் திரையரங்குக்கு வருவார்கள் எனக் கூறியுள்ளார். மர்டர், கேங்ஸ்டர், பர்ஃபி, கைட்ஸ் மற்றும் நல்ல விமர்சனங்களைப் பெற்ற லூடோ ஆகிய படங்களை இயக்கியவர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்