முத்து, படையப்பா மற்றும் பாட்ஷா கலந்த கலவைதான் அண்ணாத்த படமா?

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (19:29 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் முத்து, படையப்பா ஸ்டைலில் குடும்ப சென்டிமென்ட் மற்றும் குடும்ப கலகலப்பு காட்சிகள் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது
 
அதேபோல் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பாட்ஷா போல அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் விறுவிறுப்பாக இருக்கும் என்று தெரிகிறது எனவே முத்து படையப்பா மற்றும் பாட்சாவின் ஒட்டுமொத்த கலவைதான் அண்ணாத்த திரைப்படம் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
மேலும் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் ரஜினி டூப் போடாமல் நடித்து உள்ளதாகவும் அவர் உடல்நலக்குறைவு இருந்து இருந்தபோதிலும் மிகுந்த ரிஸ்க் எடுத்து இந்த படத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
வரும் தீபாவளியன்று பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் அண்ணாத்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்