அனபெல் சேதுபதி ரிலீஸ் தேதியை அறிவித்த டாப்ஸி

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (18:23 IST)
விஜய் சேதுபதி நடித்த அனபெல் சேதுபதி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் நாயகி டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் அனபெல் சேதுபதி திரைப்படம் செப்டம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார் 
 
ஏற்கனவே விஜய் சேதுபதியின் துக்ளக் டஹ்ர்பார், கடைசி விவசாயி, மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவருடைய இன்னொரு படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் விஜய் சேதுபதியால் லாபம் திரைப்படம்  செப்டம்பர் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்