அருண்பாண்டியனின் ‘அன்பிற்கினியாள்’: சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (19:28 IST)
அருண்பாண்டியனின் ‘அன்பிற்கினியாள்’: சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்
அருண்பாண்டியனின் ‘அன்பிற்கினியாள்’: சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்
சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த ’ஹெலன்’ என்ற திரைப்படத்தின் ரீமேக் படமான ‘அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்பதும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்ததாக செய்திகள் வெளியானது என்பதும் தெரிந்ததே 
 
மேலும் இந்த படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது 
 
‘அன்பிற்கினியாள்’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் திரையரங்குகளில் தான் ரிலீசாகும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அருண் பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் தந்தை மகளாக நடித்திருக்கும் இந்த படத்தை ’இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழிலும் மிகப் பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்