விஜய் ஆண்டனியின் இரண்டாவது ஹீரோயின்

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (15:35 IST)
‘காளி’ படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடிக்கும் இரண்டாவது ஹீரோயின் யார் என்பது தெரியவந்துள்ளது.
 



கிருத்திகா உதயநிதி படத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் படம் ‘காளி’. இதில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சுனைனா, நான்கு பேரில் முதலாவதாக கமிட்டானார். அவருடைய போர்ஷன்கள் படமாக்கப்பட்டு விட்டன. “நான்கு ஹீரோயின்களுக்குமே சரிசமமான கேரக்டர் இருக்கிறது. எனவே, யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என ஷூட்டிங்கில் கலந்துகொண்டு திரும்பிய பிறகு கூறினார் சுனைனா.

இந்நிலையில், அடுத்த ஹீரோயின் யார் என்பது தெரியவந்துள்ளது. ‘படைவீரன்’ படத்தில் விஜய் யேசுதாஸுக்கு ஜோடியாக நடித்துள்ள அம்ரிதா தான் அது. சென்னையைச் சேர்ந்தவர் இவர். விஜய் ஆண்டனி – அம்ரிதா சம்பந்தப்பட்ட காட்சிகளை, சமீபத்தில் சென்னையில் படமாக்கியுள்ளார் கிருத்திகா உதயநிதி.
அடுத்த கட்டுரையில்