அமீர்கான் படத்தில் நாக சைதன்யாவின் லுக்… இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (09:45 IST)
அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. லால் சிங் சத்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமீர்கான் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதால் இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை பிரபல நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தில் தென்னிந்திய நடிகரான நாக சைதன்யா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதையடுத்து இப்போது அவரின் போஸ்டர் வெளியாகியுள்ளது. முதலில் நாக சைத்னயா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதிதான் ஒப்பந்தம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்