அஜித் பிறந்தநாள்: அமர்களமாய் தயாராகும் ரசிகர்கள்!!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2017 (12:22 IST)
சிவா இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் படம் விவேகம். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல்கேரியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. 


 
 
இதுவரை விவேகம் படத்தின் மூன்று மாறுபட்ட போஸ்டர்களை வெளியிட்டுள்ள படக்குழு, அஜித் பிறந்தநாளில் படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
 
அஜித் பிறந்தநாளை ஒரு மாதத்திற்கு முன்பாகவே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். மேலும், அஜித் பிறந்தநாளில் கடந்த 1999-ல் வெளியான `அமர்க்களம்' படத்தை மீண்டும் திரையிட முடிவு செய்துள்ளனர்.
 
அஜித்- ஷாலினி இணைந்து நடித்த படம் என்பதால், இந்த படம் மீண்டும் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்