முஸ்லீம் பெண்ணாக மாறுகிறார் அமலாபால்

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (03:07 IST)
இயக்குனர் விஜய்யுடன் விவாகரத்து செய்து கொண்டு திருமண வாழ்க்கையை முறித்து கொண்ட நடிகை அமலாபால், தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். அரவிந்தசாமியுடன் இவர் நடித்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முஸ்லீம் பெண்களின் வாழ்க்கை குறித்து அமலாபால் தீவிரமாக அறிந்து கொண்டு வருகிறாராம். இதுகுறித்து விசாரித்தபோது அமலாபால், தெலுங்கு படம் ஒன்றில் முஸ்லீம் பெண்ணாக நடிக்கவுள்ளதாகவும், தனது கேரக்டர் படத்தில் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தனக்கு தெரிந்த முஸ்லீம் தோழிகளிடம் சில விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்வதாகவும் கூறியுள்ளாராம்

ஆயுஷ்மான் பவ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள தெலுங்கு படத்தில் தான் அமலாபால் முஸ்லீம் பெண்ணாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை சரண்தேஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் சினேகா உல் நடிக்கவுள்ளதாகவும் இதுவொரு உருக வைக்கும் காதல் கதை என்றும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்